Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார விரிவாக்கத் திட்டம்: செனகலில் புதிய விமான நிலையம்

In உலகம்
Updated: 06:27 GMT, Dec 7, 2017 | Published: 06:27 GMT, Dec 7, 2017 |
0 Comments
1189
This post was written by : Risha

பொருளாதார விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக மேற்கு ஆபிரிக்காவின் செனகலில் இன்று (வியாழக்கிழமை) புதிய விமான நிலையமொன்று திறக்கப்படவுள்ளது.

செனகல் தலைநகர் டக்காரிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டயஸ் எனும் பகுதியிலேயே குறித்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அதன்படி பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று நண்பகல் முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

575 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg