Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறிகள் விவகாரம்: ஆணைக்குழுவின் பதவிக்காலம் மீண்டும் நீடிப்பு!

In இலங்கை
Updated: 06:19 GMT, Dec 7, 2017 | Published: 06:19 GMT, Dec 7, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Varshini
central bank

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாளைமுதல் 23 நாட்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கால நீடிப்பை ஏற்படுத்தியுள்ளாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெற்றதாகக் கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதியால் இவ்வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதன் பதவிக்காலம் ஏற்கனவே பல தடவைகள் நீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இதன் விசாரணைகள் யாவும் நிறைவடைந்தன. நாளைய தினம் ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

special gazette

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)