Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காதலனை தந்தைக்கு அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்!

In சினிமா
Updated: 06:25 GMT, Dec 7, 2017 | Published: 06:25 GMT, Dec 7, 2017 |
0 Comments
1669
This post was written by : Surenth

ஸ்ருதிஹாசன் தனது காதலனான லண்டனை சேர்ந்த நடிகர் மைகேல் கோர்சலேவை தனது தந்தையான நடிகர் கமல் ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற கண்ணதாசனின் பேரன் ஆதிக் கண்ணதாசனின் திருமணம் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு அறிமுகம் செய்து வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.

மேலும், மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் வருங்கால மருமகன் மைகேல் கோர்சலே ஆகியோருடன் கமல் ஹாசன் அருகே அமர்ந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று தற்போது வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.

இதேவேளை, ஸ்ருதிஹாசனுக்கும் மைகேல் கோர்சலேவுக்கும் இடையிலான காதலுக்கும், திருமணத்திற்கும் ஸ்ருதிஹாசனின் தாயார் சரிகா சம்மதித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg