Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீண்ட தூர ரயில் சேவை முற்றாக முடக்கம்!

In இலங்கை
Updated: 06:33 GMT, Dec 7, 2017 | Published: 06:33 GMT, Dec 7, 2017 |
0 Comments
1176
This post was written by : Varshini

ரயில் இயந்திர சாரதி உதவியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் நீண்டதூர ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அலுவலக பணியாளர்களின் தேவை கருதி இயக்கப்படும் குறுந்தூர ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டதாக அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஊதிய பிரச்சினை காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேரத்திற்கு இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இன்று மாலைக்குள் உரிய பதில் வழங்காவிட்டால், சகல ரயில் சேவைகளும் நிறுத்தப்படுமென ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg