Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்!

In இலங்கை
Updated: 06:48 GMT, Dec 7, 2017 | Published: 06:48 GMT, Dec 7, 2017 |
0 Comments
1297
This post was written by : Varshini

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் செயற்பாடு, நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை மஹிந்த அணியினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் இன்னும் தேர்தல் செயற்பாட்டை முன்னெடுக்காத நிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள இவ்விசேட கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg