Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் இரட்டைப்படுகொலை- விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் கையளிக்க உத்தரவு

In இலங்கை
Updated: 06:55 GMT, Dec 7, 2017 | Published: 06:53 GMT, Dec 7, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Elakkiya
court-hammer

ஏறாவூர் இரட்டைப்படுகொலை வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மொஹமட் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஏறாவூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி 56 வயதுடைய நூர்முஹம்மது உஸைரா என்பவரும் 32 வயதுடைய அவருடைய மகள் ஜெனீராபானு மாஹிர் என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மகள் ஜெனீராபானுவின் கணவர் நீதிமன்றில் ஆஜராகி, படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத் துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட தமது தரப்புக்கு திருப்தி ஏற்படவில்லை என்று சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

மேற்படி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் நால்வருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டது. இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஐந்தாவது சந்தேகநபரான ஓட்டமாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர் என்பவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் என்பவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)