Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவது உறுதி: மேலும் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

In கிாிக்கட்
Updated: 07:44 GMT, Dec 7, 2017 | Published: 07:44 GMT, Dec 7, 2017 |
0 Comments
1282
This post was written by : Anojkiyan

தடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

டோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் டோனியை தவிர்த்து, மேலும் இரு வீரர்களை தெரிவுசெய்யும் பணியில் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, கிறிஸ் மோரிஸ், பிராவோ, பிரண்டன் மெக்கலம் ஆகிய முக்கிய வீரர்களில் இருந்து இரு வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நியதி, இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற மற்றொரு அணியான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg