Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷாலின் வேட்புமனுவை மீள்பரிசீலனை செய்ய ஆலோசனை!

In இந்தியா
Updated: 09:18 GMT, Dec 7, 2017 | Published: 07:48 GMT, Dec 7, 2017 |
0 Comments
1193
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான, நடிகர் விஷாலின் வேட்புமனுவினை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையாளர் ராஜேஸ் லக்கானி தலமையில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 இன் கீழ், சர்ச்சைக்குரிய வேட்புமனுவினை மீள் பரிசீலனை செய்வது குறித்து   ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது, ரத்து செய்யப்பட்ட ஏனைய வேட்புமனுக்களையும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற கருத்திற்கு, எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், மீள்பரிசீலனை குறித்த உறுதியான முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.

எனினும் இன்று மாலைக்குள் மீள்பரிசீலனை தொடர்பில், சென்னை மாவட்ட தேர்தல் ஆணையகத்திற்கு,  ஆணையாளர் ராஜேஸ் லக்கானி  கடிதம் அனுப்ப வாய்ப்புள்ளதாக, விஷால் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg