Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையிடம் ஆலோசனை பெறும் மாலைதீவு!

In இலங்கை
Published: 07:26 GMT, Dec 7, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Varshini
ranil n nazeed

நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல் தொடர்பில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த தேர்தலை சுயாதீனமா நடத்துதல் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக நஸீட் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நஸீட், அந்நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென அண்மையில் மாலைதீவு அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த நஸீட்டிற்கு 13 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் சுமார் 6 மாதங்கள் கழிந்த பின்னர், மருத்துவ தேவைக்காக அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு மருத்துவ தேவைக்காக பிரித்தானியா சென்ற அவர், மீண்டும் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)