Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊட்டி திரைப்பட விழா நாளை ஆரம்பம்!

In சினிமா
Updated: 07:37 GMT, Dec 7, 2017 | Published: 07:37 GMT, Dec 7, 2017 |
0 Comments
1124
This post was written by : Vithushagan

திரைப்பட துறை சார்ந்தவர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஊட்டி திரைப்பட விழா நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

குறித்த திரைப்பட விழாவில் தெற்காசியவில் உள்ள எட்டு நாடுகளைச் சேர்ந்த குறும்படங்களுடன் சிறப்புத்திரையிடலாக பிரசன்ன விதானகேயின் படைப்பாக்கத்தில் உருவாகி உலகப் பட விழாக்களில் கவனம்பெற்ற ‘ஆகஸ்ட் மாத சூரியன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

போட்டிக்காக அனுப்பப்பட்ட குறும்படங்களில் 127 படங்களைத் தெரிவு செய்து, அதில் இருந்து விருதுகளுக்குத் தகுதிபெறும் குறும்படங்களை இயக்குநர்கள் மிஷ்கின், சொர்ணவேல் ஆகியோர் தெரிவு செய்யவுள்ளனர்.

தொடர்ச்சியான திரையிடல்களுக்கு நடுவே, குறும்பட ஊடகம், மாற்று முயற்சிகள் குறித்த அனுபவ உரையாடல்கள் நிறைந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா, அஜயன் பாலா, ஷாஜி, லஷ்மி சரவணகுமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg