Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் தொடரில் சாதித்த அணித்தலைவர்கள் தரவரிசையில் முன்னேற்றம்

In கிாிக்கட்
Updated: 08:02 GMT, Dec 7, 2017 | Published: 08:02 GMT, Dec 7, 2017 |
0 Comments
2048
This post was written by : Anojkiyan

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஓட்டங்களை குவித்த இரு அணிகளின் தலைவர்களும், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர்.

இதன்படி இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் எட்டு இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் இந்த தொடரில் 28,20,57,61,164,36 ஓட்டங்கள் என மொத்தமாக 366 ஓட்டங்களை குவித்தார்.

இதேபோல இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஐந்தாவது இடத்தில் இருந்து 893 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் இந்த தொடரில் 0,104,213,243,50 ஓட்டங்கள் என மொத்தமாக 610 ஓட்டங்கள் குவித்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg