Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலைக்கு அருகில் நீதிமன்றம் வேண்டாம்: மாத்தளையில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 07:50 GMT, Dec 7, 2017 | Published: 07:50 GMT, Dec 7, 2017 |
0 Comments
1150
This post was written by : Varshini

மாத்தளையிலுள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாத்தளை விஜய வித்தியாலயத்திற்கு முன்பாக புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டிவைக்கப்பட்டது.

பாடசாலைக்கு அருகில் இவ்வாறு நீதிமன்றம் அமைப்பதானது, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை பாதிக்குமென சுட்டிக்காட்டியே இன்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg