Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்வினிடம் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை: கவாஸ்கரின் பேச்சால் பரபரப்பு

In கிாிக்கட்
Published: 08:28 GMT, Dec 7, 2017 |
0 Comments
2156
icon_com
This post was written by : Anojkiyan
ash

டெஸ்ட் போட்டியின் வர்ணனையின் போது இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை, விமர்சித்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சுனில் கவாஸ்கர், அஸ்வின் குறித்து பேசினார்.

அதில், “அஸ்வினிடம் களத்தடுப்பு செய்வதில் வளர வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் கொஞ்சம் கூட இல்லை. அவர் இன்னும் மாற வேண்டும்” என கூறியிருந்தார்.

ஆனால், கவாஸ்கர், அஸ்வினின் வளர்ச்சிக்காகவே இந்த கருத்தை கூறியிருக்கிறார் எனவும், மறுபுறம் அனைவரினதும் மத்தியில் அவர் இவ்வாறு கூறியது தவறு எனவும் இரசிகர்கள் சமூகவலைதளங்களில் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

சகலதுறை வீரராக வலம்வரும் அஸ்வின், அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)