Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்றாவது டெஸ்டில் வெற்றியை தவறவிட்டதற்கு என்ன காரணம்? புஜாரா பதில்

In கிாிக்கட்
Published: 09:02 GMT, Dec 7, 2017 |
0 Comments
2194
icon_com
This post was written by : Anojkiyan
Cricket - Sri Lanka v India - Second Test Match

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை தவறவிட்டதற்கு மோசமான களத்தடுப்பின் மூலம் பல பிடியெடுப்புகளை தவறவிட்டதே காரணம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா கூறியுள்ளார்.

போட்டி சமநிலையில் நிறைவடைந்ததன் பின்னர், ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே புஜாரா இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எங்களது களத்தடுப்பு சரியாக இல்லை. பல பிடியெடுப்புகளை தவறவிட்டோம். மோசமான களத்தடுப்பினால் இந்த டெஸ்டில் வெற்றியை இழந்தோம். இதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
களத்தடுப்பில் நாங்களும் இன்னும் முன்னேற்றம் அடைய கடுமையாக பயிற்சி பெற வேண்டும். ஒவ்வொரு பிடியெடுப்பும் முக்கியமானது. ‘சிலிப்’ பிடியெடுப்புகளை தவறவிடுவது சரியானதல்ல. இதை எப்படி நழுவ விட்டோம் என்று புரியவில்லை.

இந்த தொடரில் எங்களது வீரர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். கடைசி 2 நாட்களில் ஆடுகள தன்மை மாறிவிட்டது. இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு ஆடுகளம் கைகொடுக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தொடரில் ‘சிலிப்’ பிடியெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி பெறுவோம்” என கூறினார்.

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு அதிகவாய்ப்புகள் இருந்த போதும் இலங்கை வீர்ர்கள் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தனர்.
எனினும் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)