Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய பிரதிநிதிகளை அனுப்புமாறு ரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

In உலகம்
Updated: 09:03 GMT, Dec 7, 2017 | Published: 09:03 GMT, Dec 7, 2017 |
0 Comments
1197
This post was written by : Risha

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சிரியா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் பிரதிநிதிகளை அனுப்புமாறு ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிரிய அரசாங்கத்தின் பங்களிப்பின்றி ஆறாண்டு கால மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான பேச்சுவார்த்தை தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையிலேயே இவ்வாறு ரஷ்யாவிடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட சிரிய மோதலுக்கு முடிவுகட்டும் வகையிலான எட்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், ”இந்த பேச்சுவார்த்தையில் சிரிய அரச தரப்பு கலந்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ரஷ்யாவிற்கு விளக்கமளித்துள்ளோம். அதன்படி பேச்சுவார்த்தைகளில் சிரியாவின் பங்களிப்பை உறுதிசெய்யும் பொறுப்பு ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ரஷ்யா சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு ரஷ்யாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg