Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவின் கணவருக்கு பிடியாணை: சி.பி.ஐ.நீதிமன்றம் உத்தரவு!

In இந்தியா
Updated: 10:01 GMT, Dec 7, 2017 | Published: 09:43 GMT, Dec 7, 2017 |
0 Comments
1256
This post was written by : Kemasiya

சொகுசுக்கார் இறக்குமதி வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு லெக்சஸ் என்னும் சொகுசு காரை இறக்குமதி செய்ததாக கூறி, 1.62 கோடி ரூபாவை மோசடி செய்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சசிகலாவின் கணவர் உட்பட மேலும் இருவருக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இதை தொடர்ந்து சி.பி.ஐ தமது கோரிக்கைகளை ஏற்று சீராக விசாரிக்கவில்லை என்று தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றில் நடராஜன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, குறித்த வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த 17 ஆம் திகதி (நொவம்பர்), குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட உயர் நீதிமன்றம், இவர்களுக்கான 2 வருட சிறைத்தண்டனையை உறுதி செய்து நடராஜனை சரணடையும்படி உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதுவரையில் அவர் சரணடையாத நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றம் குறித்த பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg