Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தையை கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு!

In கனடா
Published: 10:14 GMT, Dec 7, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg

ரொறன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் குழந்தையை கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேக நபரின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், சுமார் ஐந்து அடி ஏழு அங்குல உயரமுள்ள அவர் சுமார் 130 இறாத்தல் எடை கொண்டவராக இருப்பார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.50 அளவில், யங் வீதி மற்றும் லோரன்ஸ் அவனியூ ஈஸற் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அது குறித்த காணொளிப் பதிவினையும் வெளியிட்டுள்ளனர்.

29 வயதான பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையுடன் நின்றிருந்த வேளையில், அவரை அணுகிய இனந்தெரியாத பெண், தாயாரின் கையிலிருந்து குழந்தையை பறித்துக் கொண்டு தப்பியோட முனைந்ததாகவும் காப்பாற்ற முயன்ற தயாரை கடுமையாக தாக்கி பின்னர் தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)