Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் மரண விசாரணை தொடர்கிறது: இன்றும் இரு வைத்தியர்கள் ஆஜர்!

In இந்தியா
Updated: 11:16 GMT, Dec 7, 2017 | Published: 11:16 GMT, Dec 7, 2017 |
0 Comments
1139
This post was written by : Kemasiya

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலமையில் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வழக்கு மீண்டும் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் தர்மராஜ் மற்றும் வைத்தியர் பாலாஜி ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.  இவர்கள் அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்தும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, உணவு ஆகிவை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதோடு நீதிபதியின் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்.

இதுவரையில் குறித்த விசாரணைக்குழு முன்னிலையில் 8 வைத்தியர்கள் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg