Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைஞனை கொலை செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

In இலங்கை
Published: 10:00 GMT, Dec 7, 2017 |
0 Comments
1928
icon_com
This post was written by : Varshini
judge m.elancheliyan

கிளிநொச்சியில் இளைஞன் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்திற்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (வியாழக்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி உதயநகரில் வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது – 29) என்பவர் போத்தலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் பின்னர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இடம்பெற்ற விசாரணைகளில், போதிய சாட்சியங்கள் இல்லாததால் இரண்டாவது சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார். முதலாவது சந்தேகநபருக்கு எதிரான சாட்சிகள் வலுவாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)