Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து பிரான்ஸ்- அல்ஜீரியா பேச்சு

In ஐரோப்பா
Updated: 10:22 GMT, Dec 7, 2017 | Published: 10:22 GMT, Dec 7, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Risha
fran

பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான சமூக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், அல்ஜீரிய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மக்ரோன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

நேற்றைய விஜயத்தின் போது, அல்ஜீரிய தலைநகரில் அல்ஜீரிய குடிமக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து 1954- 1962 காலப்பகுதியில் இடம்பெற்ற சுதந்திர போரில் கொல்லப்பட்ட நூறாயிரக் கணக்கானோரை நினைவுகூர்ந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அல்ஜீரிய பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது.

பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவில் கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அல்ஜீரியாவின் பிரதான பங்காளியாக சீனா உள்ள நிலையில், அதற்கு அடுத்த படியாக பிரான்ஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)