Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அச்சுவேலி விபத்தில் இளைஞன் படுகாயம்

In இலங்கை
Updated: 10:33 GMT, Dec 7, 2017 | Published: 10:33 GMT, Dec 7, 2017 |
0 Comments
1281
This post was written by : Varshini

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தவகுலரட்னம் பிரசாந்த் (வயது-24) என்ற இவ்விளைஞன், இன்று (வியாழக்கிழமை) மோட்டார் சைக்கிளில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கனரக வாகனம் ஒன்றில் மோதுண்டுள்ளார்.

இதன்போது, நிலைகுலைந்து விழுந்த இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg