Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்த் யோர்க்கின் பிரைடில் பாத் பகுதியில் சுமார் 160 வீடு உடைப்புச் சம்பங்கள் பதிவு

In கனடா
Published: 10:52 GMT, Dec 7, 2017 |
0 Comments
1046
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg

நடப்பு வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நோர்த் யோர்க்கின் பிரைடில் பாத் பகுதியில் சுமார் 160 வீடு உடைப்புச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நெடுங்சாலை 401, லெஸ்லி வீதி, லோறன்ஸ் அவனியூ, பேவியூ அவனியூ ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ள பகுதியிலேயே இவ்வாறான வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

குறிப்பாக வீடுகளில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நேரம், மீண்டும் வீட்டுக்கு வரும் நேரம், உறங்கும் நேரம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனித்து, கணிப்பிட்டு திருடர்கள் நுதனமாக திருடுகின்றனர்.

இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான வீடு உடைப்புச் சம்பவங்கள் குறித்த இந்த பகுதியில், மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அச்சத்தையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)