Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.-இல் இணைந்தவர்களுக்கு மீண்டும் நாட்டில் இடமில்லை: பாதுகாப்பு அமைச்சர்

In
Updated: 10:58 GMT, Dec 7, 2017 | Published: 10:58 GMT, Dec 7, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Risha
maxresdefault

ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிட்ட பிரித்தானிய குடிமக்கள், மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற கவின் வில்லியம்சன், பிரித்தானிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”சுமார் 800 பிரித்தானியர்கள், சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துள்ளனர். அவர்களில் 130 பேர் வன்முறைகளின் போது உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிட்டு வந்தவர்கள், ஒருபோதும் மீண்டும் சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது.

நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு போராடுவதற்கு சென்ற கிளர்ச்சியாளர்களை கண்டறிந்து, அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)