Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு வகை சுவையுடைய மாங்காய் கறி!

In
Published: 11:15 GMT, Dec 7, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Anojkiyan
sweet_sour_mango_curry

தேவையான பொருட்கள்

மாங்காய் (பெரியது) – ஒன்று
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
சீனி – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) – அரை தேக்கரண்டி
வெங்காயம் – பாதி பாகம்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – (3-5) மேசைக்கரண்டி
தேங்காய் பால் – கால் கப்

செய்முறை

முதலில் மாங்காயை சுத்தமாக கழுவி தோலை சீவ வேண்டும். பின்னர் நீள வாக்கில் வெட்டி அதனை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். விதையை அகற்ற வேண்டும்.

இதன்பிறகு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு போட்டு வெங்காயம், சீரகம் போட்டு தாளிக்கவும்.  அதன் பின் அதில் வெட்டிய மாங்காய், மிளகாய்தூள் போட்டு பிரட்டவும் நன்றாக பிரட்டிய பின் தண்ணீர் விட்டு அதன் நீர் ஒரளவு வற்றும் வரை வேக விடவும்.

ஒரளவு வெந்ததும் தேங்காய் பால் விட்டு மீண்டும் அவியவிடவும். தேங்காய் பால் ஒரளவு வற்றியதும் (பிரட்டலாக வந்ததும்) சீனியை போட்டு பின்பு 1 அல்லது 2 நிமிடம் விட்டு இறக்கவும். இப்போது நான்கு வகை சுவையுடைய மாங்காய் கறி தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)