Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் பேருந்துகளில் ஒலி, ஒளிபரப்பு சாதனங்களை பயன்படுத்தத் தடை!

In இந்தியா
Updated: 11:21 GMT, Dec 7, 2017 | Published: 11:12 GMT, Dec 7, 2017 |
0 Comments
1450
This post was written by : Surenth

தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னர் தனியார் பேருந்துகளில் ஒலி, ஒளிபரப்பு சாதனங்களை பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சுமார் ஏழு ஆயிரம் பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களை நீக்குவதற்கான நடவடிக்கையாக அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததை தொலைதூரப்பயணிகள் விரும்பி தனியார் பேருந்துக்களில் பயணங்களை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg