Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களை அகற்ற தீர்மானம்!

In இலங்கை
Published: 11:13 GMT, Dec 7, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Puvanes
kovil002

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு – கல்லடி, திருப்பெருந்துறை பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் கோயில் அமைக்கும் நடவடிக்கையினை சிலர் முன்னெடுத்துள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஆலயம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான அரச ஊழியர்களின் விடுதிகள், பிரதேச செயலாளரின் விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே கோயில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பிரதேச கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸார் ஆகியோர் ஆலயம் அமைக்கும் பணியை இடை நிறுத்தினர்.

மேலும், ஆலயம் அமைக்கப்பட்டுள்ள காணியானது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என்பதால், அங்கு ஆலயம் அமைக்கமுடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதி பற்றைக்காடாக கிடந்த காரணத்தினால் அதனையே துப்புரவு செய்து அதில் ஆலயம் ஒன்றை அமைத்துள்ளதாக பிரதேசத்தினை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அரச காணிக்குள் குறித்த ஆலயம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதனால் அவற்றினை அகற்றுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என குணநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி, திராய்மடு ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான ஆலயங்கள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவைகளும் அகற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

kovil001 kovil003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)