Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் குற்றச்சாட்டிற்கு பதில் வழங்கியது இந்தியா!

In இந்தியா
Published: 11:39 GMT, Dec 7, 2017 |
0 Comments
1189
This post was written by : Kemasiya
download

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, இந்தியாவின் பறக்கும் கண்காணிப்பு கமரா பொருந்திய ஏவுகணை (ட்ரோன்), சீன எல்லைக்குள் நுழைந்துள்ளதாக இந்திய ராணும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் ட்ரோன் என்னும் கண்காணிப்பு கமரா சீன எல்லைப் பகுதிக்குள் நுழைந்தமையை முன்னிட்டு, குறித்த எல்லைமீறல் சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக, அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் இன்று (வியாழக்கிழமை) மேற்படி பதில் வழங்கியுள்ளது.

சிக்கிம் செக்டரில், இந்தியாவின் “ட்ரொன்” என்னும் விண்வெளி ஆய்வுக் கமரா வழக்கமான சோதனையில் ஈடுபட்டது. இதன்போது எல்லையை மீறிய கமரா பொருந்திய ஏவுகணையினை சீனா ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் மேற்படி பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg