Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

In
Published: 11:45 GMT, Dec 7, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Vithushagan
baby after bath #11

குளிர் காலத்தில் பிறந்த குழந்தையை  எப்படி  பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம்.

குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும்.

பிறந்த குழந்தையை குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத, பருத்தி சட்டையை முதலில் போட்டு, அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது  தடிப்பான பனியனை போட்டு விடலாம்.

தலைக்கு பருத்தி குல்லா, கை, கால்களுக்கு உறை போடலாம். குழந்தையின் சட்டையில் பட்டன், கொக்கி, ஜிப் இருக்கக் கூடாது கட்டக்கூடிய வகையில் இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.

கடைகளில் விற்கப்படும், ‘நாப்கின், டயாபர்’களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி, பிறப்பு உறுப்பில் கிருமித் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிறந்த குழந்தைக்கு நீர், மலம், இரண்டுமே அதிகம் வெளியேறும் என்பதால், புண்ணாகும் வாய்ப்பு அதிகம். பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற பருத்தி துணிகளை முக்கோணமாக மடித்து, தளர்வாக இடுப்பில் கட்டிவிடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)