Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர். தேர்தலுக்கான வேட்பாளர்கள் விபரம் வெளியானது: விஷாலின் பெயர் நிராகரிப்பு!

In இந்தியா
Published: 11:59 GMT, Dec 7, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Kemasiya
sfs

ஆர்.கே.நகர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள நிலையில், விஷாலின் நிராகரிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் விபரத்தினை, தேர்தல் ஆணையகத்தில் அலுவலர் வேலுச்சாமி இன்று (புதன்கிழமை) மாலை வெளியிட்டுள்ளார்.

இதில் 58 வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விஷால் மற்றும் தீபா ஆகியோரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இத் தேர்தலுக்காக 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந் நிலையில் குறித்த மனுக்களை நேற்று முன்தினம் பரிசீலனைக்கு எடுத்துகொண்ட தேர்தல் ஆணையகம், நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 73 பேரின் வேட்புமனுக்களை ரத்து செய்திருந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த விஷால், நேற்று தேர்தல் ஆணையகத்தில் நிஜாயம் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் வேட்புமனு மீள்பரிசீலனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்தும் இன்று மாலை மீள் பரிசீலனைக்காக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையகத்திற்கு கடிதம் அனுப் வாய்ப்புள்ளதாக  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையகம் தனது இறுதி முடிவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)