Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் பாரம்பரியம் பேணப்படுதல் அவசியம்: சத்தியலிங்கம்

In இலங்கை
Published: 12:05 GMT, Dec 7, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Puvanes
vavuniya002

பொது நிகழ்வுகள் நடைபெறும் போது அவற்றில் தமிழர்களின் பாரம்பரியம் பேணப்படுதல் அவசியம் என வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் வடமாகாண சபை சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு தமிழர் பாரம்பரிய வாத்திய கருவிகளான இன்னிய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர்கள் பாரம்பரியம் பேணிக்காக்கப்பட வேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக வரவேற்பு நிகழ்வுகளின் போது மேலைத்தேய வாத்தியங்கள் இசைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா ஒரு இலட்சத்து 52 ஆயிரம் பெறுமதியான பொருட்களே வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

 vavuniya004

vavuniya003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)