Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் அறிவிப்பை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை: பிரான்ஸ்

In ஐரோப்பா
Updated: 12:29 GMT, Dec 7, 2017 | Published: 12:29 GMT, Dec 7, 2017 |
0 Comments
1329
This post was written by : Risha

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பான எதிரொலியை வெளிப்படுத்தும் வகையில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருந்தத்தக்க முடிவுக்கு பிரான்ஸ் ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது என்றும், இந்த முடிவு சர்வதேச சட்டத்திற்கும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கும் எதிரானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிராந்தியங்களில் அமைதியை நிலைநாட்டி, அனைவரையும் பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்திய பிரான்ஸ் பிரதமர், வன்முறைகளை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg