Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ்- கட்டார் இடையே 12 பில்லியன் மதிப்பிலான உடன்படிக்கைகள்

In உலகம்
Published: 13:08 GMT, Dec 7, 2017 |
0 Comments
1314
icon_com
This post was written by : Risha

பிரான்சிற்கும் கட்டாரிற்கும் இடையே 12 பில்லியன் யூரோ மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கட்டார் மன்னர் தமீம் பின் அஹமட் அல் தானியுடன் கூட்டாக இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”இரு தரப்பிற்கான பொருளாதார உறவின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு துறை, ஆயுத தொழில்துறை, மண் மாசை கையாளுதல் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இன்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 12 பில்லியன் யூரோவாகும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் இருநாட்டு உறவின் தீவிரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)