Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ராவிஸ் சின்னையா சிறந்த தலைவர்: நாமல் ராஜபக்ஷ

In இலங்கை
Published: 12:40 GMT, Dec 7, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Varshini

கடற்படை தளபதியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா, சிறந்த ஆற்றல் கொண்ட ஒரு தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், சிறப்பாகவும் உண்மையாகவும் செயற்படுபவர்களை அரசாங்கம் பதவியிலிருந்து நீக்குவதை வழமையாக கொண்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை திம்புலகல பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக கொண்டுவர ரவி கருணாநாயக்க அதிகம் பாடுபட்டார். ஆனால், பிணை முறி மோசடி விவகாரத்தில் அவரை பதவி நீக்கிவிட்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வது பிழையான விடயமென அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார். அவர் வகித்துவந்த கப்பல்துறை அமைச்சுப் பதவியை பறித்துவிட்டனர். அர்ஜூனவை ஆதரித்து பேசிய விஜயதாச ராஜபக்ஷவையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டனர்.

ரஷ்யாவிலிருந்து கப்பல் கொண்டுவருவது பிழையென குறிப்பிட்ட செயலாளர் ஒருவரின் பதவிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.

இலங்கையில் பாரிய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறி, தமிழ் கடற்படை தளபதி ஒருவரை நியமித்தனர். ட்ராவிஸ் சின்னையா, கடற்படையிலுள்ள சிறந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். ஆனால், ஒரே மாதத்தில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதுதான் நல்லாட்சி. நல்லாட்சியில் சிறந்த வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை.

வரலாற்றில் முதல் தடவையாக மூன்று வருடங்களில் மூன்று வெளிவிவகார அமைச்சர்களை நியமித்து விட்டனர். குறிப்பாக தற்போதைய வெளிவிவகார அமைச்சரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரி நியூயோர்க் சென்றிருந்தார. ஆனால், வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றில் உள்ளார். ஜனாதிபதி அங்கு சென்று என்னென்ன வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வந்தாரென தெரியாது.
தற்போது தேர்தல் நெருங்குவதால், மீண்டும் வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)