Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு அதியுயர் விருது

In
Updated: 17:51 GMT, Dec 7, 2017 | Published: 14:02 GMT, Dec 7, 2017 |
0 Comments
1843
icon_com
This post was written by : S.K.Guna

ஞானம் அறக்கட்டளையின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி, அதன் இணை நிறுவுனர் திருமதி பிரேமா சுபாஸ்கரன்அவர்களுக்கு மனித நேயத்தினைப் பேணுவதற்கான அமைப்பானது (WE CARE FOR HUMANITY ) இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணி (woman of the year 2017) என்ற அதியுயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோனியாவில் உள்ள மனித நேயத்தினை நாம் பேணுவோம் (WE CARE FOR HUMANITY) அமைப்பினால் 5 வது ஆண்டாக நடத்தப்பட்ட மாண்புமிகு உலக அதிகாரிகள் விருது விழாவில் (The Annual Global Officials of Dignity Awards ) ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனரும் லைக்கா ஹெல்த் வெஸ்ட் மின்ஸ்ரர் ஹெல்த் கெயாரின் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன்அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது விழாவானது WE CARE FOR HUMANITY அமைப்பின் தலைவர் இளவரசி மரியா ஆமர் தலைமையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத் தொகுதியில் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த அதியுயர் விருதினைப் பெற்றுக்கொண்ட திருமதி பிரேமா சுபாஸ்கரன் தெரிவிக்கையில்;

உலகம் முழுதும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவும் நோக்கில் எனது கணவர் அல்லிராஜா சுபாஸ்கரனும் அவரது தாயார் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவும் நானும் இணைந்து ஞானம் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையை உருவாக்கினோம்.

சமுதாயத்தில் வறுமையில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களின் திறன்களை மேம்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கமாகும்.

மேலும் தன்சானியா, சூடான், இந்தியா,இலங்கை ,பாகிஸ்தான்,ருமேனியா, பிலிப்பைன்ஸ் , முதலான பலநாடுகளுக்கு ஞானம் பவுண்டேஷன் மூலம் வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

Mrs.Prema Subaskaran 2

Mrs.Prema Subaskaran 3

Mrs.Prema Subaskaran 4

Mrs.Prema Subaskaran 5

Mrs.Prema Subaskaran 7

Mrs.Prema Subaskaran 8

Mrs.Prema Subaskaran 9

Mrs.Prema Subaskaran 10

Mrs.Prema Subaskaran 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)