Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல்களுக்காக ஆதாரங்கள் இருந்தும் எவரும் தண்டிக்கப்படவில்லை: அநுர குமார

In இலங்கை
Published: 15:05 GMT, Dec 7, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Puvanes
anura001

கடந்தகாலங்களில் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதுவரையிலும் தண்டிக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான சாட்சியங்களும், ஆதாரங்களும் நிதி மோசடி குற்றப்பிரிவு, மற்றும் குற்றப்புலனாய்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரையிலும் எந்த குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை. இப்படியான ஓர் நிலையில் தான் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள்ளாகவே மத்திய வங்கியில் பாரிய கொள்ளை நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்குள் உள்ளவர்களே மோசடிகளைச் செய்யும் போது, உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் நடைபெறாது என்பதனை எவ்வாறு உறுதியாக கூறமுடியும்.

எவ்வாறாயினும் இப்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அநுர குமார மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)