Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ஆதரவாளர்களுக்கு வலைவிரிக்கும் சுதந்திர கட்சி?

In இலங்கை
Updated: 15:26 GMT, Dec 7, 2017 | Published: 15:26 GMT, Dec 7, 2017 |
0 Comments
1134
This post was written by : Puvanes

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில், அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பசில் போன்ற நபர்களிடம் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கையாக செயற்படாமல் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் என துமிந்த தனக்கு அழைப்பு விடுத்ததாக தினேஷ் கூறியுள்ளார்.

கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், பசில், நாமல் போன்றோர் நடந்து கொண்ட விதம் தங்களுக்கு மறந்துவிட்டதா எனவும் துமிந்த தன்னிடம் கேட்டதாக, தினேஷ் அவர் தரப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ஆதரவாளர்கள் மைத்திரி அணிப்பக்கம் தாவவுள்ளதாக பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவரின் கருத்துகள் மஹிந்த ஆதரவாளர்களின் மத்தியில் சலசலப்பினை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயிலும் எதிர்வரும் தேர்தலில் தான் கூட்டு எதிர்க்கட்சியின் தீர்மானங்களுக்கு அமைவாகவே செயற்படுவேன் என நேற்று ஊடகங்களுக்கு தினேஷ் குணவர்தன கருத்து வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg