Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நலிவுற்றோருக்கு இலகு கடன் திட்டம் நடைமுறைக்கு வரும்: சந்திரிக்கா

In இலங்கை
Updated: 16:47 GMT, Dec 7, 2017 | Published: 16:47 GMT, Dec 7, 2017 |
0 Comments
1147
This post was written by : Puvanes

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் இலகு கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர அமைப்பாளர்களுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், வாழ்வாதார திட்டத்திற்குள் நலிவுற்ற மக்களுக்காகவும், மீனவர்களுக்கு உதவுவதற்காகவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலகு கடன் போன்ற திட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோன்று தற்போதைய நிலையில் பெரும்பாலான உதவிகள் வழங்கி முடிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய சந்திரிக்கா, மேலதிகமான செயற்பாடுகளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெடுக்க வேண்டாம் என தான் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே அடுத்தவருட ஆரம்பத்திற்குள் இந்ததிட்டங்கள் செயற்படுத்தப்படும் என உறுதி கூறியுள்ள சந்திரிக்கா, அடுத்த வருடம் முதலாக அம்பாறை பகுதிகளுக்கு நேரடி விஜயங்களை மேற்கொண்டு பிரச்சினைகளை கண்டறிவதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg