Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேற்றுக்கிரகவாசிகள் வாழும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது!

In அறிவியல்
Published: 17:06 GMT, Dec 7, 2017 |
0 Comments
3300
icon_com
This post was written by : Puvanes
earth001

பூமிக்கிரகத்தை போன்ற புதியதோர் கிரகத்தினை கனேடிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

K2-18B எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கிரகமானது பூமிக்கிரகத்தினை ஒத்ததாக காணப்படுவதாகவும், பூமியில் இருந்து சுமார் 111 ஒளிஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாறைகளால் இந்தக் கிரகம் உருவாக்கப்பட்டுள்ளாதால் இதன் மேற்பரப்பில் பனி மற்றும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே இங்கு நிச்சயமான வேற்றுக்கிரகவாசிகள், உயிரினங்கள் வாழும் வாய்ப்புகள் அதிகம் எனவும் கனடா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று இந்தக்கிரகத்திற்கு அருகில் மற்றுமோர் கிரகமும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு K2-18C எனப்பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மேலதிக ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கியுள்ளனர்.

இதேவேளை, பூமியைத்தாண்டி உயிரினங்கள் அல்லது உயிர்வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்ற தேடலில் ஈடுபட்டுள்ள நாசாவும் அண்மையில் பூமியை ஒத்த 10 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இவ்வாறானவற்றின் மூலம் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு உறுதிபடுத்தப்பட்டு வருகின்றது என்றாலும், அதனை முற்றுமுழுதாக விஞ்ஞானிகள் இன்றும் வெளிப்படுத்த வில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)