Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தேர்தல் வரை உள்ளூராட்சி தேர்தல் எதிரொலிக்கும்: ஜீ.எல்.பீரிஸ்

In இலங்கை
Updated: 17:25 GMT, Dec 7, 2017 | Published: 17:25 GMT, Dec 7, 2017 |
0 Comments
1232
This post was written by : Puvanes

தற்போதைய அரசாங்கத்தின் நீடிப்பு தொடர்பாக விடயங்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் மூலமாக ஓர் முடிவு கிடைக்கும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது உள்ளூராட்சி சபைக்கான பிரதிநிதிகளை மாத்திரம் தேர்வு செய்ய வரையறுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அந்தக் காலப்பகுதி வரையிலும் இந்த உள்ளூராட்சிசபை தேர்தல் முடிவுகள் எதிரொலிப்பதோடு பல மாற்றங்களைம் ஏற்படுத்தும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் முடிவுகள் மூலம் சுதந்திரக்கட்சியின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், இப்போதைய நிலையில் கூட்டு எதிர்க்கட்சியை, சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள் எனினும் அது உண்மையான அழைப்பிற்கான கோரிக்கை அல்ல எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg