Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் முடிவால் பற்றி எரியும் ஜெருசலம்

In உலகம்
Updated: 18:35 GMT, Dec 7, 2017 | Published: 17:31 GMT, Dec 7, 2017 |
0 Comments
2742
icon_com
This post was written by : elayathambi
skynews-ramallah-protest-trump-jerusalem_4176421

உலகளாவிய விமர்சனங்களுக்கு நடுவே, டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலத்தை அறிவித்ததை அடுத்து, ஜெருசலம், ரமெல்லா, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப்புறம் ஆகிய பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.  பலஸ்தீன நகரங்களில் பணிப் புறக்கணிப்பிற்கான அழைப்பை பாலஸ்தீன அதிகார சபை விடுத்துள்ளது. இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் மற்றுமொரு கிளர்ச்சிக்கான அழைப்பை விடுத்துள்ளது.

இன்று வீதியில் இறங்கியுள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய    ராணுவத்திற்கெதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.  வன்முறைகள் அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளின்,  வான்பரப்பெங்கும்   வீதிகளில் எரியூட்டப்பட்ட ரயர்களில் இருந்து எழும் தீயும் கரும்புகையும் பரவியுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

palastine

 

மற்றுமொரு  கிளர்ச்சிக்கு பாலஸ்தீனர்கள் தயாராவதன் அறிகுறியாக இது தெரிகிறது. டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கெதிராக கிளர்த்திருக்கும் மக்கள், இஸ்ரேலிய    ராணுவத்தினருக்கு எதிராக கற்களை வீசுகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலிய காவல்படை கண்ணிர்ப் புகை மற்றும் றப்பர்  குண்டுகளை  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.

மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகளைக் குழப்பக் கூடியதும், குறித்த பிரதேசத்தில் வன்முறைகளை ஏற்படுத்தக் கூடியதுமான டொனால்ட் ட்ரம்பின் முடிவை சர்வதேசத் தரப்பினர் வன்மையாக கண்டித்துள்ளனர். எச்சரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் எப்போதுமே பொருட்படுத்தாத டொனால்ட் ட்ரம், இஸ்ரேலுக்கான அமெரிக்கத்  தூதரகத்தை டெல் அவிவ் இலிருந்து ஜெருசலத்திற்கு மாற்றவும் முடிவு செய்திருக்கிறார்.

Untitled33

அமெரிக்க அதிபரின் இம் முடிவை வன்மையாக கண்டிக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக் காரர்கள் அமெரிக்கக் கொடிகளையும், ட்ரம்பின் உருவப் பொம்மைகளையும் எரியூட்டி தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)