Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் – பள்ளிமுனை காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!

In இலங்கை
Published: 03:11 GMT, Dec 8, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Ravivarman
photo pallimunai 07.12 (6)

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் உள்ள 25 வீட்டுத் திட்ட கிராம மக்களின் காணிகளே விடுவிக்கப்படவுள்ளதுடன், இதற்கான நில அளவீட்டு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றன.

பள்ளிமுனை மீனவக் குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கைகளை மன்னார் பிரதேச செயலகம் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ், மக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன், பங்குத் தந்தை அருட்பணி ஸ்ரீபன் அடிகளார், கடற்படை அதிகாரிகள் வழக்குத் தொடுத்திருந்த பொதுமக்கள், கிராம அலுவலகர் முன்னிலையில் மன்னார் பிரதேச செயலக நில அளவையாளர் நிக்சன், காணி உத்தியோகத்தர் ஆகியோர்களால் இக் காணிகள் அளவை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

photo pallimunai 07.12 (11) photo pallimunai 07.12 (3) photo pallimunai 07.12 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)