Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்: முதல்வர்

In இந்தியா
Updated: 10:47 GMT, Dec 8, 2017 | Published: 04:03 GMT, Dec 8, 2017 |
0 Comments
1343
This post was written by : Kemasiya

கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஓஹி புயல் அனர்த்தம் குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு நேற்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்த கடிதத்தின் மூலமே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“ஓஹி புயலின் தாக்கத்தை தொடர்ந்து, காணாமல்போன மீனவர்களை தேடும் பணியிலும், மீட்புபணியிலும் நமது ராணுவம் அளித்த ஆதரவும் சேவையும் பாராட்டத்தக்க விடயம்.

குறித்த மாவட்டம்  மிகக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். காணாமல்போன மீனவர்களை மீட்க வேண்டும் என தமிழக முப்படையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோன்று கரையொதுங்கிய மீனவர்களுக்கு தங்குமிடவசதிகள் அளித்து, ஆதரவுவழங்கிய அனைத்து மாவட்டங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓஹி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார கட்டமைப்புகள், தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட விவசாயம், சாலைகள், மீனவர்களின் உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி என பலவும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

மேலும், கடுமையான பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு நிவாரணப்பணிகளை மேற்கொள்ள போதிய நிதிஉதவிகளையும் அளிக்கவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்புவதற்குத் தேவையான அத்தனை உடனடி நடவடிக்கைகளையும்  தமிழகஅரசு விரைந்து மேற்கொண்டுள்ளது.  பாதிப்புத்தொடர்பான விரிவான அறிக்கையையும்  தயார்செய்து வருகிறது.

இதுதொடர்பான விரிவான கோரிக்கை மனு, மத்தியஅரசிடம் அளிக்கப்படும். இந்த இக்கட்டானதருணத்தில் தங்களது உடனடி உதவி எங்களுக்கு மிகவும் அவசியமாகிறது. மேலும் ஓஹி புயலால் கடும்பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg