Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள்: பௌஸி

In இலங்கை
Updated: 03:48 GMT, Dec 8, 2017 | Published: 03:48 GMT, Dec 8, 2017 |
0 Comments
1143
This post was written by : Ravivarman

பல்வேறு இனத்தவர் மற்றும் மதத்தவர் புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமாதானத்தை விரிவுபடுத்த மதம், கலாச்சாரம், தேசிய பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் சமாதானத்தை விரிபடுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முதலில் பன்முகத்தன்மையை மதித்தல் பல மதங்கள் மற்றும் கலாச்சார செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆற்றல் அறிவை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய ஒன்றிணைப்பை முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டங்கள் பல்கலைக்கழக மட்டத்திலும் நடத்தப்பட்டன. இதன்மூலம் சமாதான மற்றும் மறுசீரமைப்பை ஏற்படுத்த இவர்களின் ஆற்றலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விளையாட்டு கேலிச் சித்திரம் பயன்படுத்தி தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg