Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியின் அடுத்த இலக்கு! வீழ்வது யார்?

In கிாிக்கட்
Published: 05:05 GMT, Dec 8, 2017 |
0 Comments
1780
icon_com
This post was written by : Sujitharan
kohli_pti-m1

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இலங்கை அணியுடனான டெஸ்ட் வெற்றியுடன் அவர் புதிய சாதனை ஒன்றுக்கும் சொந்தக்கார் ஆகியிருக்கிறார்.

 ஓர் ஆண்டில், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு தலைமைத் தாங்கிய விராட் கோஹ்லி, இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதன்மூலம், 2015 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் படைத்திருந்த 30 வெற்றிகள் என்ற சாதனையினை அவர் முறியடித்துள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள், மற்றும் ரி-ருவென்ரி தொடர்களிலிருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், கோஹ்லியின் சாதனை வெற்றி 31 வெற்றியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயசூரிய 2001 ஆம் ஆண்டிலும், அவுஸ்ரேலிய தலைவர் பொண்டிங் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளிலும்,  தென்னாப்பிரிக்க தலைவர் சுமித் 2007 ஆம் அண்டிலும், தத்தமது அணிகளுக்காக 29 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)