Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்: சர்வேஸ்வரன்

In இலங்கை
Published: 04:50 GMT, Dec 8, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Ravivarman
01

தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போராளிகளைப்போல ஆசிரியர்களும் எமது இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வலய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் நேற்று (வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது இனத்தின் விடிவிற்காக ஆயிரமாயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்க்கைக்காகவே தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

அவர்களைப்போலவே ஆசிரியர்களும் எம் இனத்தை கல்வியில் உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். உங்கள் அனைவரையும் எமது இனத்தின் கல்வியை உயர்த்துவதற்காக பாடுபடும் போரளிகளாகவே நான் பார்க்கிறேன்.

புனிதமான ஆசிரியர் சேவையை வைத்துக்கொண்டு உங்களைப்போன்ற பலரை நீங்கள் அனைவரும் எம்மினத்திற்காக உருவாக்கித் தரவேண்டும்” என அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், உள்ளிட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

10 (1) 09 (1) 06 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)