Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீனத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

In
Published: 05:55 GMT, Dec 8, 2017 |
0 Comments
1760
icon_com
This post was written by : Elakkiya
_99116414_634f8445-0e89-4b20-8936-f70ae64c5a45

அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸூடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை பலஸ்தீனம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் பலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பல தசாப்த உத்தியோகபூர்வ அமெரிக்க கொள்கைகளை தகர்த்தெறிந்து இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

சர்வதேச அளவில் எதிர்ப்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பு பலஸ்தீன மக்களிடையில், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலம், ரமெல்லா, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப்புறம் ஆகிய பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் வெடித்துள்ளன. இஸ்ரேல் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல்களில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 31 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பலஸ்தீனின் முக்கிய அரசியல் இயக்கமாக இருக்கும் ஹமாஸ், காலவரையறையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு கரை மற்றும் காஸா எல்லைகளில் இஸ்ரேல் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இம்மாத இறுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி, மைக் பென்ஸ் மற்றும் பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக பலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. மைக் பென்ஸின் வருகையை தாம் விரும்பவில்லை என்றும் பலஸ்தீன தலைவருடனான சந்திப்பு இடம்பெறாது என்றும் மூத்த பலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)