Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கியது இலங்கை!

In இலங்கை
Updated: 05:46 GMT, Dec 8, 2017 | Published: 05:46 GMT, Dec 8, 2017 |
0 Comments
1380
This post was written by : Ravivarman

வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் முக்கியஸ்தருமான வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு – கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.

எனினும் 13ஆவது திருத்தத்தைத் தீர்வாகஏற்க தமிழீழ விடுதலைப் புலிகள், சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார்.

போர் நிறைவடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவிசாவில் இலங்கைக்கு வந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு தற்போது இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg