Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிந்தால் மோதிப்பார்! தென்னாப்பிரிக்க வீரர்களை வம்புக்கிழுக்கிறார் புஜாரா

In கிாிக்கட்
Updated: 05:41 GMT, Dec 8, 2017 | Published: 05:41 GMT, Dec 8, 2017 |
0 Comments
1815
This post was written by : Sujitharan

தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவோம் என, இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக திகழும் புஜாரா கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சாதிக்குமா? என்ற கேள்விகளும் விமர்சனங்ளும் எழுந்துள்ள நிலையில், புஜாரா இவ்வாறு கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க தொடர் குறித்து புஜாரா மேலும் தெரிவிக்கையில்,

”தென்ஆப்பிரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என நம்புகிறேன். முந்தைய தென்னாப்பிரக்க அணிக்கும், தற்போதைய தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையில் நிறைய, வேறுபாடுகள் காணப்படுகின்றது.

டிவிலியர்ஸ், கலிஸ் இல்லாத தென்னாப்பிரிக்க அணி சமநிலை இல்லாத அணியாக விளங்குகின்றது. நாம் நல்ல அனுபவத்துடனும், திறமையுடனும் இருக்கிறோம். 2010, 2013 ஆம் ஆண்டுகளில் நான் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடியுள்ளேன்.

தற்போதைய அணியிலுள்ள பல வீரர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையடிய அனுபவத்தைக் கொண்டவர்கள். அது எமக்கு கைக்கொடுக்கும். முக்கியமாக எமது வேகப்பந்து வீச்சு வலுவடைந்துள்ளது. இதைக் கொண்டு தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவோம்” என்றும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg