Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“என் சாதனையை கோஹ்லியே முறியடிப்பார்“ – மனம் திறந்தார் சங்கா

In கிாிக்கட்
Published: 06:07 GMT, Dec 8, 2017 |
0 Comments
2327
icon_com
This post was written by : Sujitharan
modi

தன்னுடைய சாதனையை, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியே முறியடிப்பார் என, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககார படைத்துள்ள, ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை, கோஹ்லி 51 ஓட்டங்களினால் தவறவிட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்று வகையான போட்டிகளையும் சேர்த்து ஓர் ஆண்டில் அதிக ஒட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரக குமார் சங்ககார விளங்குகிறார். இவர் ஒர் ஆண்டில் 2868 ஓட்டங்களைப் பெற்று அந்த சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

தற்போது மிகச்சிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தி வரும், விராட் கோஹ்லி இந்த ஆண்டில், 2818 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய அணி இலங்கையுடன் இன்னும், 3 ஒருநாள் மற்றும் 3 ரி-ருவென்றி போட்டிகளில் விளையாடவுள்ள போதிலும், விராட் கோஹ்லிக்கு அந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சங்காவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை கோஹ்லி தவறவிட்டார். இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அடுத்த வருடம் தன்னுடைய சாதனையை முறியடிப்பார் என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

இதற்கு கோஹ்லிக்கு நீண்ட ஆண்டுகள் தேவைப்டாது என்றும், அடுத்த வருடமே இந்த சாதனையை அவர் முறியடிப்பார் என்றும் நம்பிக்கை வௌயிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)