Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூ மெக்சிகோ உயர்தர பாடசாலையில் துப்பாக்கிச்சூடு- துப்பாக்கிதாரி உட்பட மூவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:13 GMT, Dec 8, 2017 | Published: 06:13 GMT, Dec 8, 2017 |
0 Comments
1191
This post was written by : Elakkiya

நியூ மெக்சிகோ உயர்தர பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நியூமெக்சிகோவின் வடமேற்கு பகுதியில் அஸ்டெக் நகரில் நேற்று (வியாழக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன்  முடிவில் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிதாரி தவிர மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் துப்பாக்கிதாரியினதோ அல்லது உயிரிழந்த இரண்டு மாணவர்களினதோ பெயர் விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து பாடசாலை மூடப்பட்டு முற்றுமுழுதாக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg